×

மாங்குளம் சாலையில் சிறுபாலங்கள் சீரமைக்க கோரிக்கை

மதுரை, நவ. 29: மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டியிலிருந்து லட்சுமிபுரம் வழியாக கிடாரிபட்டி வரை செல்லும் சாலை 10 கி.மீ தூரம் கொண்டது. இச்சாலையில் பூசாரிபட்டி, ஜோதியாபட்டி, லட்சுமிபுரம் விலக்கு, சின்ன மாங்குளம், மாங்குளம் என, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், லட்சுமிபுரம் விலக்கிலிருந்து கிடாரிபட்டி செல்லும் திசையில் மாங்குளத்தில் பெரியாறு பிரதான கால்வாயின் 10வது கிளை கால்வாய் குறுக்கிடுகிறது.

இந்த இடத்திலும், சின்ன மாங்குளத்தில் பிரிவு வாய்க்கால் குறுக்கிடும் இடத்திலும் சிறுபாலங்கள் உள்ளன. சுமார், 5 ஆண்டுகளுக்கு முன் இச்சாலை அமைக்கப்பட்டபோது கட்டிய இப்பாலங்கள், அதன்பின் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அவற்றின் உறுதிதன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. இவற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Mangulam road ,Madurai ,Chittampatti ,Madurai-Trichy National Highway ,Kitaripatti ,Lakshmipuram ,Poosaripatti ,Jyothiyapatti ,Lakshmipuram bypass ,Chinna Mangulam ,Mangulam… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...