×

சிபிஎம் கட்சியினர் 51 பேர் உடல் தானம்

மதுரை, நவ. 29: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில், 51 பேர் தங்களின் உடலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க முடிவு செய்தனர். இதற்கான உறுதிமொழி படிவங்களை, மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமாரிடம், நேற்று வழங்கினர்.

இதில், 22 பேர் தங்களின் உடல் உறுப்புகளையும் தானம் செய்வதாக தெரிவித்து, அதற்கான உறுதிமொழி படிவங்களையும் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் கணேசன், ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் முரளிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Tags : Madurai ,Communist Party of India-Marxist ,Madurai Government Medical College ,Madurai government ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...