×

குறிச்சி குளத்தில் மிதந்த பெண் சடலம் மீட்பு

கோவை, நவ. 29: கோவை போத்தனூரை அடுத்து குறிச்சி குளக்கரையில் நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதந்து கொண்டு இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதுக்கரை தாலுகா கிராம நிர்வாக அதிகாரி பாலதுரைசாமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Kurichi pond ,Coimbatore ,Pothanur ,
× RELATED திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை