×

நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

கோவை, நவ.29: கோவை நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (22). இவர் சமீபத்தில் கஞ்சா வழக்கில் சாயிபாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று மாதேசை போலீசார் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அவர் திடீரென கோர்ட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் காயமடைந்த மாதேசை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Coimbatore court ,Mathesh ,Saibaba Colony ,
× RELATED திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை