×

வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம்

வத்தலக்குண்டு, நவ. 29: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் ரூ.2 லட்சம் நிதியில் நவீன கழிப்பறை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சரவணகுமார் வரவேற்றார். தலைமை எழுத்தர் முருகேசன் தீர்மான அறிக்கை வாசித்தார்.

வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் 2025-26ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டுவதற்கு தீர்மானம், வத்தலக்குண்டு பேரூராட்சியின் பணிகள் முடிவடைந்த எரிவாயு தகனமேடையைபராமரித்து கொள்ள கோவை இஷா பவுண்டேஷன் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலரும், திமுக நகரச் செயலாளருமான சின்னத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், பிரியா, ராமுத்தாய், அழகு ராணி,சியமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் கருணாகரன் நன்றி கூறினார்

 

Tags : Vattalakunda Town Panchayat Meeting ,Vattalakunda ,Vattalakunda Government Hospital ,Vattalakunda Special Status Town Panchayat Meeting ,Chidambaram ,Vice Chairman ,Dharmalingam ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...