×

திருவையாறு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தல்

திருவையாறு, நவ.29: திருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றங்களில் இஃபைலிங் முறையை கைவிட வலியுறுத்தி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜெஏஏசி) அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை 1.12.2025 தேதி முதல் கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், சங்க செயலாளர் அரங்கமுருகராஜ் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.

 

Tags : Thiruvaiyaru ,Thiruvaiyaru Unified Court Lawyers Association ,Joint Committee of Tamil Nadu ,Puducherry Bar Associations ,JAAC ,Tamil Nadu… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...