×

தஞ்சையில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.29: தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கவுன்சில் செயலாளர் சேவியர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்தையன், துணை செயலாளர் சேகர், அஇதொமுச பேரவை வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சில் தலைவர் செல்வராஜ், அரசு போக்குவரத்து கழக பேரவை துணைத் தலைவரும் பொதுச் செயலாளருமான பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வேலை நேரத்தை உயர்த்த கூடாது, தொழிற்சங்க உரிமையை பறிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொமுச நிர்வாகிகள் , இணைப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கவுன்சில் பொருளாளர் ஆண்ட்ரூ கிருஸ்டி நன்றி கூறினார்.

 

Tags : Workers' Progressive Union Council ,Union BJP government ,Thanjavur ,Thanjavur Head Post Office ,District Workers' Progressive Union Council ,District Council ,Xavier ,Vice President ,Muthaiyan ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...