- Kumbabhishekam
- Kadaiyampatti
- பிரசன்னா வெங்கடரமணசுவாமி கோயில்
- சின்னத்தி, மரக்கோட்டை கிராமம்,
- பத்மாவதி தாயார்
காடையாம்பட்டி, நவ.29: காடையாம்பட்டி தாலுகா, மரக்கோட்டை கிராமம் சின்னதிருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்பு மண்டபம், பத்மாவதி தாயார் சன்னதி ஆகியவை புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று காலை, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் செண்டை மேளம் முழங்க நடைபெற்றது. இதில் சின்னதிருப்பதி, சனிச்சந்தை மற்றும் தெப்பக்குள வீதி வழியாக சென்ற ஊர்வலம், கோயிலை வந்து அடைந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
