×

பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவத்தினை நாளைக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம அலுவலரிடம் ஒப்படைக்காலம்: கலெக்டர் பிரதாப் தகவல்

திருவள்ளூர், நவ.29: திருவள்ளூரில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலரிடம் நாளைக்குள் ஒப்படைக்காலம் என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 1.கும்மிடிப்பூண்டி, 2.பொன்னேரி, 3.திருத்தணி, 4.திருவள்ளூர், 5.பூந்தமல்லி, 6.ஆவடி, 7.மதுரவாயல், 8.அம்பத்தூர், 9.மாதவரம்மற்றும் 10.திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 அமல்படுத்தப்பட்டு, கடந்த 4ம்தேதி முதல் வீடு வீடாகச்சென்று வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களுக்கு, கடந்த 4ம்தேதி முதல் வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வரும் டிச.4ம்தேதி வரை திரும்பபெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் கணக்கெடுப்பு படிவங்களை பரிசீலனை செய்து, வாக்குச்சாவடி நிலைய அலுவலரின் செயலியிலும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதனால், வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்து வழங்குவதை கடைசி நாளான டிச. 4ம்தேதி வரை வரையிலும் எடுத்துக்கொள்ளாமல், முடிந்த வரையில் (30ம்தேதி) நாளைக்குள் வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ, அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலரிடமோ ஒப்படைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Pratap ,Thiruvallur ,Tiruvallur District ,Election Officer ,District Collector ,
× RELATED புழல் அருகே தொடர் மழை காரணமாக குளமாக...