×

மாற்று திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்பு குளச்சல் நகராட்சி

குளச்சல், நவ.28: தமிழக அரசு கடந்த தினங்களுக்கு முன்பு நகராட்சி, பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து குளச்சல் நகராட்சியில் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்த ஸ்டான்லி (55) என்பவரை நகராட்சி நிர்வாக இயக்குனர் நியமனம் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கன்னியப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டான்லி உறுதிமொழி எடுத்து, பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நசீர், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், மேலாளர் ஸ்டீபன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நியமன கவுன்சிலர் ஸ்டான்லி மாதந்தோறும் நடக்கும் நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு 24 வார்டுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை குறித்து பேசுவார்.

Tags : Kulchal Municipality ,Kulchal ,Tamil Nadu government ,Stanley ,Kulchal Port Street ,Municipal Administrative Director ,Municipality ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...