×

அறந்தாங்கி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்

அறந்தாங்கி, நவ.27: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வின்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் துல்லியமாகவும், குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெறுவது குறித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள், பெறப்பட்ட ஆவணங்கள், கணினி பதிவேற்றம் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த 285 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எஸ்ஐஆர் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், 100 சதவீத வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணியினை நிறைவு செய்த 38 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் பாராட்டுத் தெரிவித்து, கவுரவித்தார்கள். மேலும், இப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் விரைந்து பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.

Tags : Aranthangi Municipality ,Aranthangi ,District Election Officer ,Aruna ,Pudukkottai district ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...