×

பெரம்பலூர் டிஎன்சிஎஸ்சியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு பச்சை அட்டையை வழங்க வேண்டும்

பெரம்பலூர், நவ.27: தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் பெரம்பலூர் மண்டலத்தில் பெரம்பலூரில் துறை மங்கலத்திலும், வேப்பந்தட்டை அருகே கிருஷ்ணாபுரத்திலும், பாடாலூர் அருகே ஊத்தங்கால் பகுதியிலும், குன்னம் அருகே அல்லிநகரம் பகுதியில் குடோன்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 59பேர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.

2022ஆம் ஆண்டில் 10 ஆண்டுகள் பணிமுடித்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையை வழங்க வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை, உடனே வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும். சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட 16 பேர் ஆர்ப்பாட்டம் செய்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மற்ற குடோன்களிலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Perambalur ,TNCSC ,MANGALA ,PERAMBALUR ZONE ,TAMIL NADU CIVIL SUPPLY CORPORATION COMPANY ,KRISHNAPURA ,NEAR ,VEPANTHATA ,OODANGAL AREA ,NEAR BATALUR, ALLINAGARAM NEAR KUNNAM ,
× RELATED சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி