தரங்கம்பாடி, நவ. 27: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்ததால் மழை நீர் உப்பனாற்றின் வழியாக கடலில் கலக்க கரை புரண்டு ஓடுகிறது. தரங்கம்பாடி பகுதியில் வீரசோழன் ஆற்றில் இருந்து உபரிநீர் அனந்தமங்கலம் தடுப்பணையில் இருந்து உப்பனாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் துவக்கத்தில் பலத்த மழையும் அதைத்தொடர்ந்து சில நாட்கள் வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்ததன் காரணமாக அதிக அளவில் மழை நீர் ஆற்றில் கலந்து கடலில் கலப்பதற்கக உப்பனாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
