சிவகங்கை, நவ.27: சிவகங்கை அரண்மனைவாசல் முன் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதில் 10சதவீத ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்லமுத்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார். அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு நிர்வாகி கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் மெய்யப்பன், கிருஷ்ணகுமார், ராமகிருஷ்ணன், அரியமுத்து, பாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் உதயசங்கர் நன்றி கூறினார்.
