×

வாக்காளர் பட்டியலில் குளறுபடியை சரி செய்யக்கோரி மனு

சிவகங்கை, நவ.27: பழையனூர் பாசனக் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பழைனூர் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்புவனம் அருகே பழையனூர் கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 1வது மண்டல ஆட்சி மன்றத் தொகுதியில் உள்ள பெயர்கள் மற்றும் இரண்டாவது ஆட்சி மன்றத் தொகுதியில் உள்ள பெயர்கள் மூன்றாவது, நான்காவது ஆட்சி மன்றத் தொகுதியில் உள்ளது. இவ்வாறு சுமார் 318 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள நபர்களுக்கு மூன்றாவது, நான்காவது தொகுதியில் நிலமோ, பட்டாவோ இல்லை. முறைகேடாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து பழையனூர் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga ,Pazhayanur Irrigation Water Users Association ,Pazhayanur ,Thiruppuvanam ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...