- கொட்டாரம்
- நாகர்கோவில்
- செந்தில் ஆறுமுகம்
- கன்னியாகுமாரி
- ராதிகா
- கொட்டாரம் பத்திரப் பதிவு அலுவலகம்
- ராதிகா…
நாகர்கோவில், நவ. 27: கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (59). ரோடு ரோலர் டிரைவர். இவரது மனைவி ராதிகா (55). சம்பவத்தன்று செந்தில் ஆறுமுகம், அவரது மனைவி ராதிகாவுடன் கொட்டாரம் பத்திரப்பதிவு அலுவலக ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை தூறி கொண்டு இருந்தது. ராதிகா பைக்கில் பின்னால் குடை பிடித்தவாறு இருந்துள்ளார். ஆனால் பைக் வேகமாக சென்றதால், குடையை பிடிக்க முடியவில்லை. இதனால் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போதே, குடையை ராதிகா மடக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி, பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இது தொடர்பாக, கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பைக்கில் செல்லும் போது குடை பிடிக்க கூடாது என பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கேட்பதில்லை என போலீசார் வேதனையுடன் கூறினர்.
