×

பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், நவ.26: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி, இளம் நெல் நடவு பயிருக்கு உரிய நிவாரண நிதி வழங்க தமிழக அரசை நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்து இரவு பகலாக கனமழை பெய்தது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, பல்லவராயன் பேட்டை, ஒரத்தநாடு, ஒக்கநாடு மேலையூர் திருவையாறு, நாகத்தி, பணவல்லி, ஆற்காடு, காட்டுகோட்டை என பல்வேறு இடங்களில் தற்போது சம்பா தாளடி நடவு செய்த இளம் நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்து உள்ளது. மேலும் ஒருவார காலமாக தண்ணீர் வடிய போதிய வடிகால் இல்லாததாலும், கிளை வாய்க்கால் தூர்வாரத நிலையில் பல ஆயிரம் ஏக்கர் நெல் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி போய் உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Farmers' Association ,Thanjavur ,Weak Farmers' Association ,Tamil Nadu government ,Thanjavur district ,Tamil Nadu Weak Farmers' Association ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...