தஞ்சாவூர், நவ 26: தெதர்லாந்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தென்னிந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுலா மேற்கொள்ள, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து தங்களது பயணத்தை நேற்று தொடங்கினர். நெதர்லாந்த் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சாவூர் வந்தனர். இதில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
நவீன வசதிகளுடன் கூடிய சைக்கிளில் கேமரா பதிவுகளுடன் இந்த பயணத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக பெரிய கோயிலுக்கு சென்று கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடங்கினர். ஒரு மாத காலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்தியா முழுவதும் சென்று பல்வேறு சுற்றுலா தலங்களையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட்டு, அதன் விவரக்குறிப்புகளை எடுத்துச் செல்ல உள்ளனர்.
