×

பெரம்பலூரில் எஸ்ஐஆர் பணிகளில் திமுக நிர்வாகிகள் செயல்பாடுகள்

பெரம்பலூர், நவ.26: தகுதியுடைய யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்கவும், தகுதியற்ற யாரும் புதிதாக சேர்க்கப்படாதிருக்கவும் திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என பெரம்பலூரில் திமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் தலைமையில் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். டிசம்பர் 4ஆம் தேதிக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என்பதால், வாக்கு வங்கியை இழந்து விடாதிருக்கவும், தகுதி உடைய வாக்காளர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்கவும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப் படாதிருக்கவும் திமுக நிர்வாகிகள், களப்பணியாளர் களுடன் தீவிரமாக பணியாற்ற வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்ய முடியாத நபர்களுக்கு துரிதமாக உதவி தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரையும் விடுபாடின்றி இணைத்திட பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், திமுக மாநிலநிர்வாகிகள் துரைசாமி, குன்னம் இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பெரம்பலூர் தொகுதி மேற்பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் தொகுதி மேற்பார்வையாளர் ஏ.கே.அருண், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, முருகேசன், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், நூருல் ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் வல்லபன், ஜெகதீஸ் வரன், நீலமேகம், பேரூர் செயலாளர்கள் செல்வலட்சுமி ரவிச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஹரி பாஸ்கர்,மகாதேவி, கார்மேகம், தங்க கமல், ரமேஷ், மணிவாசகம் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னால், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,SIR ,Perambalur ,Minister ,S.C. Sivashankar ,Palakkarai ,Perambalur… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...