- அமைச்சர்
- சிவசங்கர்
- அரியலூர் மாவட்டம்
- Jayankondam
- போக்குவரத்து
- மின் அமைச்சர்
- எஸ்சி சிவசங்கர்
- முத்துவாஞ்சேரி
- தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து கழகம்
- திருச்சி வலயம்
ஜெயங்கொண்டம், நவ.26: அரியலூர் மாவட்டத்தில் 9 புதிய BS-VI நகரப்பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம் சார்பில் 2 புதிய BS-VI நகரப்பேருந்துகளையும், சுத்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 1 புதிய BS-VI நகரப்பேருந்தினையும் மற்றும் ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் 6 புதிய BS-VI நகரப்பேருந்துகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி, உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்றையதினம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் முத்துவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், நகரப்பேருந்து குறியீட்டு எண்.14A ஜெயங்கொண்டத்திலிருந்து சிலால், தா.பழூர் வழியாக முத்துவாஞ்சேரிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.019A ஜெயங்கொண்டத்திலிருந்து வாணதிரையன் பட்டினம், விக்கிரமங்கலம் வழியாக முத்துவாஞ்சேரிக்கும், ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 2 பதிய BS-VI நகரப்பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் துவக்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, சுத்தமல்லி பேருந்து நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் நகரப்பேருந்து குறியீட்டு எண்.003C ஜெயங்கொண்டத்திலிருந்து, தா.பழூர், கோட்டியால் வழியாக சுத்தமல்லிக்கு ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்துக்கு பதிலாக புதிய BS-VI நகரப்பேருந்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
பின்னர், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் நகரப்பேருந்து குறியீட்டு எண்.006A ஜெயங்கொண்டத்திலிருந்து ஆண்டிமடம், இடையக்குறிச்சி வழியாக கொடுக்கூர் பகுதிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.004A ஜெயங்கொண்டம் – குணமங்கலத்திற்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.015A ஜெயங்கொண்டத்திலிருந்து, கல்லாத்தூர், ஆண்டிமடம் வழியாக தென்னூருக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.013A ஜெயங்கொண்டம் – முருக்கன்குடிக்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.007A ஜெயங்கொண்டத்திலிருந்து, அழகாபுரம், சிலம்பூர் வழியாக திருக்கோணத்திற்கும், நகரப்பேருந்து குறியீட்டு எண்.011A ஜெயங்கொண்டத்திலிருந் பலது, தேவனூர், கொடுக்கூர் வழியாக ஆதனக்குறிச்சிக்கும் ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 6 பதிய BS-VI நகரப்பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தசா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இதன் மூலம் ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து இயக்கப்படும் 23 நகர விடியல் பேருந்துகளும் புதிய பேருந்துகளாக இயக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், கும்பகோணம் நிர்வாக இயக்குநர் திரு.தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் திரு.டி.சதீஸ்குமார், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
