ஜெயங்கொண்டம், நவ.22: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சாலைகளில் சாகசம் செய்யக்கூடாது என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இவர், பல்வேறு காவல் நிலையங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தில் போட்டி சாகசம் செய்தவர்களை கைது செய்து எச்சரிக்கை செய்தும் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனந்தவாடி பிரிவு ரோட்டில் பொதுமக்கள் செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் வாகனத்தையொட்டி சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சாலைகள் சாகசங்கள் செய்தவர்கள் மீது இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
