×

எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியில் தீவிர சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதன் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் எஸ்ஐஆர் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றதோடு, கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலுக்கு இடையே வாக்காளர் தீவிர திருத்தம் செய்வது பல இன்னல்களை உருவாக்கியுள்ளது என்றும் வாதம் முன் வைத்தார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தரப்பு எதிர்ப்பை நிராகரித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யாகாந்த் புதிய மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Election Commission ,SIR ,New Delhi ,Tamil Nadu ,Kerala ,
× RELATED டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 275...