×

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையங்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் உள்ளது என அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை நேற்று முதல் 27ம் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30ம் தேதி முதல் வரும் ஜனவரி 19ம் தேதி வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகவல் மையங்கள் அடுத்த வருடம் 20 தேதி வரை செயல்படும். சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ayyappa ,Tamil Nadu ,Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Sabarimala ,Sridharma Sastha ,
× RELATED இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல,...