×

நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவிக்காக 8 பேருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் திமுக சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ. 6 கோடியே 35 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில்நேற்று ரூ.2,00,000 கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 35 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 (இரண்டு லட்சம்) நேற்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,DMK ,Kalaignar Karunanidhi Foundation ,
× RELATED சட்டமன்ற தேர்தலில்...