×

சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் எஸ்ஐஆர் தொடர்பாக விழிப்புணர்வு ரங்கோலி கோலம்

 

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் வண்ண ரங்கோலி கோலமிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தக் கணக்கீட்டுப் படிவம் 04.11.2025 முதல் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கீட்டுப் படிவம் வழங்குவது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பள்ளிப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவம் பூர்த்தி செய்து வழங்குவது தொடர்பான அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் வண்ண ரங்கோலி கோலமிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தின் முன்புறம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வண்ண ரங்கோலி கோலமிடப்பட்டது.

Tags : Rangoli Kolam ,Ribbon Building Complex ,Chennai ,Election Commission of India ,Chennai Corporation… ,
× RELATED இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு...