×

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலைய உள் மற்றும் வெளி வளாகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையம் அதிவிரைவு அதிரடி படை வீரர்களால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

Tags : MADURAI AIRPORT ,Madurai ,Delhi ,Madurai Airport Rapid Action Force ,
× RELATED இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு...