×

தமிழ்நாடு முழுவதும் 3,644 2ம் நிலை காவலர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 3,644 2ம் நிலை காவலர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது. 45 மையங்களில் நடைபெறும் தேர்வுக்கு 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறையில் 2,833 காவலர்கள், சிறைத் துறையில் 180 சிறைக் காவலர்கள், தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு பணியிடங்கள் 21 ஆகியவை அடங்கும்.

இந்த காலிப் பணியிடங்களுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 2.25 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 45 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக முதல்முறையாக விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு சரிபார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Uniform Personnel Selection Board ,Police Department ,
× RELATED திட்டமிடாத விதிகளால் பெரும் குழப்பம்;...