×

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 12ம் தேதி 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் நவ.12ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,Tenkasi ,Thoothukudi ,Nellai ,Kanyakumari ,
× RELATED பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏப்ரல்...