×

திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம்

சென்னை: திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னனர். திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் ஏற்கனவே 5 துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ள நிலையில் மேலும் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூர் கிழக்கு – இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு கே.ஈஸ்வரசாமி எம்.பி. மாவட்ட பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பொறுப்பாளர். வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கதிர் ஆனந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். காட்பாடி, கீழ்வைத்தியணான்குப்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கதிர் ஆனந்த் எம்.பி. பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Dimugh ,Chennai ,Dimuka ,Deputy Secretary General ,K. Bonmudi ,M. Fr. SAMINATHAN ,Tiruppur ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...