×

‘அதிமுகவில் பிளவு அவங்கதான் கவலைப்படணும்’ பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ சார்பில் ஸ்ரீவைகுண்டம் வஉசி திடலில் நடந்த பூத் நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அதிமுக பிளவுபடுவது, அக்கட்சியின் அமைப்பு குறித்து அவர்கள்தான் கவலைப்படுவார்கள். கூட்டணி என்பது ஒரு இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. அடுத்தக்கட்டத்திற்கு போகக் கூடாது என்றார்.

Tags : Radhakrishnan ,Srivaikundam ,Minister ,Pon ,Booth Administrators Conference ,Wausi Thital ,Baja, Tuthukudi Southern District ,Adimuka alliance ,Tamil Nadu ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...