×

தமிழ்நாட்டின் திட்டங்களை மையப்படுத்தி பீகார் பாஜக தேர்தல் அறிக்கை!

 

பாட்னா: சட்டப்பேரவை தேர்தலையொட்டி பீகாரில் தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயக கூட்டணி வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 121 தொகுதிகளில் நவ.6ஆம் தேதியும், 122 தொகுதிகளில் நவ.11 ஆம் தேதியும் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. நவ.14ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நவ.4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 28-ந்தேதி எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில்;

4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்படும்.

பீகாரில் ஏழு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

பீகாரில் 10 புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கே.ஜி. முதல் பி.ஜி. வரை கல்வி இலவசம்

பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்

ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு நிதியுதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.

பீகார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டின் திட்டங்களை மையப்படுத்தி பீகார் பாஜக தேர்தல் அறிக்கை!
உயர்கல்வி பயிலும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் 1 (Extremely Backward Class – EBC) மாதம் ரூ.2,000 உதவித்தொகை!

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துடன் சத்துள்ள காலை உணவு

தரமான மருத்துவக் கல்வி நிறுவனம் (உலகத் தரம் 3 வாய்ந்த மருத்துவக் கல்வி நிறுவனம்) மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைத்தல்!

1 கோடி அரசு வேலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்

‘மிஷன் கரோர்பதி’ மூலம் பெண்கள் தொழில்முனைவோராக மாற்றப்படுவார்கள். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Bihar ,BJP ,Tamil Nadu ,Patna ,National Democratic Alliance ,NDP ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...