×

53 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் செயற்கை மழை பெய்விக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி!!

டெல்லி : டெல்லியில் காற்று மாசை நீக்குவதற்காக 53 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மேக விதைப்பு சோதனை செய்யப்பட்டது. டெல்லியில் குளிர் காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக குளிர்காலத்தில் காற்றில் கலந்துள்ள அடர்த்தியான காற்று மாசுவை கலைப்பதற்காக செயற்கை மழையை பெய்விக்க டெல்லி அரசு திட்டமிட்டது. இதையடுத்து, செயற்கை மழையை உருவாக்க டெல்லி பாஜக அரசு, கான்பூரில் உள்ள ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சாதகமான வானிலை தென்பட்டதால், மேக விதைப்பு சோதனை நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசம் கான்​பூரில் இருந்து செஸ்னா ரக விமானம் டெல்​லிக்கு புறப்​பட்​டது. சுமார் 6,000 அடி உயரத்​தில் பறந்த இந்த விமானம், டெல்​லி​யின் புராரி, விஹார், கரோல் பாக் உள்​ளிட்ட இடங்​களில் திரண்​டிருந்த மேகங்​கள் மீது சில்​வர் அயோடைடு, சோடி​யம் குளோரைடு, பொட்​டாசி​யம் அயோடைடு ஆகிய ரசாயனங்​கள் தெளிக்​கப்​பட்​டன. இருந்தாலும் மழை பொழியவில்லை. மொத்தம் மூன்று முறை இவ்வாறு மேக விதைப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறை முயற்சித்தும் மழை இல்லாத நிலையில், அரசு அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.எனினும் நவம்​பர் 30-ம் தேதி வரை மேக விதைப்பு முயற்​சிகள் தொடர்ந்து நடை​பெறும் என்று கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags : Delhi ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...