×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்தது: வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது

சென்னை: தங்கம் விலை நேற்று காலை, மாலை என அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்தது. இதே போல வெள்ளி விலையும் அதிரடி சரிவை சந்தித்தது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை பவுன் ரூ.91,600க்கு விற்பனையானது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.150 குறைந்து கிராம் ரூ.11,300க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.90,400க்கும் விற்பனையானது. அதே போல நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலைதங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11075க்கும், பவுனுக்கு ரூ.1800 குறைந்து ஒரு பவுன் ரூ.88,600க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,
× RELATED டிச.14: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!