சீர்காழி, அக்.28: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காழி முத்தமிழ் முற்றத்தின் சார்பில் கல்வி எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் வீழிநாதன் தலைமை வகித்தார். வெள்ளாகுளம் கவிஞர் பாலகிருஷ்ணன் கல்வி எனும் தலைப்பில் நெடியதொரு கவிதையினை வாசித்தார். சீர்காழி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் கவிதைகளை வாசித்தனர். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக வீரபாண்டியன் வரவேற்புரையாற்றினார். செயலர் இளங்கோ அறிக்கை வாசித்தார் . அகோரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்த ராசேந்திரன் செய்திருந்தார். ஆசிரியர் வைத்தியநாதசுவாமி நன்றி கூறினார்.
