×

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

மயிலாடுதுறை, அக்.28: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 34 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 8 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி 25 மனுக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைகோரி 22 மனுக்களும், பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் 35 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 21 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 28 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நில பிரச்னை தொடர்பாக 12 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 30 மனுக்களும், இலவச கான்கிரீட் வீடு வேண்டி 10 மனுக்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக 5 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பாக 11 மனுக்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக 13 மனுக்கள், தொழிலாளர் நலன் தொடர்பாக 4 மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை தொடர்பான மனுக்கள் 35 என மொத்தம் 293 மனுக்கள் பெறப்பட்டன.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai District Collectorate ,Special ,Collector ,Geetha ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா