×

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்ரிக்காவை தெறிக்கவிட்ட ஆஸி: 7 விக். வீழ்த்திய அலானா

இந்தூர்: மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 26வது போட்டியில் நேற்று, தென் ஆப்ரிக்கா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா, ஆஸியின் அபார பந்து வீச்சால், 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸியின் அலானா கிங் 7 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 16.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 98 ரன் எடுத்தது. அதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி மகத்தான வெற்றி பெற்றது.

தமிழ்நாடு ரன் குவிப்பு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று துவங்கின. பெங்களூரு நகரில் நடந்த போட்டியில் தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழந்து, 399 ரன்னுடன் வலுவான நிலையில் உள்ளது. விமல் குமார் 189 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 156, ஆந்த்ரே சித்தார்த் 30 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

Tags : Women's World Cup Cricket ,Aussies ,South Africa ,Alana ,Indore ,Australia ,Women's World Cup One-Day Cricket ,Aussie ,Alana… ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!