×

வெனிசுலாவில் ஓடுபாதையில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம்: 2 பேர் உயிரிழப்பு

கராகஸ்: வெனிசுலாவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் உடனே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ஓடுதளத்தை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் கருகி பலியாகினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Venezuela ,Caracas ,Paramillo airport ,Tachira province ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்