×

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதியை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

Tags : Bank Sea ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்