×

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போச்சம்பள்ளி, அக்.18: போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை சார்பில் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து, ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி, தீ விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொண்டு, எவ்வித அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் நிலைகளில் மீட்பு பணிகள் செய்து காப்பாற்றுதல் தொடர்பாக ஒத்திகை பயிற்சி, ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.

Tags : Pochampally ,Pochampally Fire Department ,Pochampally Government Boys and Girls Higher Secondary School ,Diwali ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்