×

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல், அக்.18: நாமக்கல் அருகே உள்ள பழையபாளையத்தில் அதிமுக 54வது ஆண்டு துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில அதிமுக வர்த்தக அணி இணைசெயலாளர் தேவி மோகன் கலந்துகொண்டு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சேவல் ராஜி, எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன், மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Namakkal ,Pazhalayam ,AIADMK Business Team ,Joint Secretary ,Devi Mohan ,MGR ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி