- தமிழ்நாடு வெற்றி கட்சி
- தேர்தல் ஆணையம்
- நீதிமன்றம்
- சென்னை
- இந்திய தேர்தல் ஆணையம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- விஜய்
- கரூர்...
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவெக அங்கீகரிக்கப்படாத கட்சி; அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோர முடியாது என தேர்தல் ஆணையம் வாதம் வைத்துள்ளது. மேலும் தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, டிஜிபி பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
