×

தீபாவளி பண்டிகை: சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். வருகிற 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு.பொதுமக்கள் புத்தாடைகள், பொருட்கள் வாங்கவும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராயர் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிபஜார், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை, பூக்கடை, புரசைவாக்கம், தியாகராயர் நகரில் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்
நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Diwali festival ,18,000 police ,Chennai ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...