மஹாராஷ்டிரா: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே 1ஏ போர் விமானத்தின் முதல் பயணம் தொடங்கியது. இந்தியா விமானப்படைக்காக ரசால், விராட் போன்ற விமானங்களை பல்வேறு நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விமான படைக்கு தேவையான விமானங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் நமக்கு தேவையான போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நவீனரக விமானத்தை தயாரித்துள்ளது.
இதற்காக வெளிநாடுகளில் இருந்து இன்ஜின்கள் வரவழைக்கப்பட்டு, பொருத்தப்பட்டு மற்ற பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்தகைய விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிக் விமானங்கள் தற்போது நீண்டகாலமாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்புவதற்கு தேஜஸ் எம்கே 1ஏ ரக விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
