×

ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கிளை!

மதுரை: ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டுக்குரியது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், ஜாதி பெயர்கள் நீக்குவது குறித்து கருத்து கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. மேலும், சாலைகள், தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக்கூடாது. சாலைகள், தெருக்கள் பெயர் மாற்றுவதில் ஏற்படும் குழப்பங்கள் குறித்து என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது. என்ன முடிவு எடுக்க எடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Madurai ,High Court ,Tamil Nadu… ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...