சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். அக்டோபர்.20ல் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இன்றும் நாளையும் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை, திருச்சி வழியாக மறுநாள் காலை 10.45க்கு மதுரை செல்லும்.
தீபாவளி – 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம் செய்யப்படும். நாளை மற்றும் அக். 21ம் தேதி மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்.
முன்பதிவில்லா பயணிகளை வரிசையாக ஏற்ற வேண்டும்
முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளை வரிசையாக ஏற்றிவிட வேண்டும் என ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம் வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கம்.
தீபாவளி: இன்று தாம்பரம்-கூடுவாஞ்சேரி சிறப்பு ரயில்
தீபாவளியை ஒட்டி பயணிகளின் வசதிக்காக இன்று தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரயில். தாம்பரத்திலிருந்து இரவு 7.45 மணிக்கும், 7.53க்கும், 8,10க்கும் சிறப்பு ரயில் புறப்பட்டுச் செல்லும்.
காட்டாங்குளத்தூர் – தாம்பரம் சிறப்பு ரயில்
தீபாவளி முடிந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக அக்.22ல் காட்டாங்குளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4 மணி, 4.30 மணி, 5 மணி, 5.35 மணி, 6.25 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்.
தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்
பயணிகளின் வசதிக்காக அக்.22ல் தாம்பரம்- காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 5.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு 6.10 மணிக்கு காட்டாங்குளத்தூர் சென்றடையும்.
