×

எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி விட்டார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு ஒன்று, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில்,’எச்​1பி விசாவுக்​கான கட்​ட​ணத்தை தற்​போது பன்​மடங்கு உயர்த்​தி இருப்பது திறமை​யான வெளி​நாட்டு தொழிலாளர்​களை நம்​பி​யிருக்​கும் அமெரிக்க நிறு​வனங்​களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் தற்போதைய முடிவால், மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களையும், தேவாலயங்கள், போதகர்களையும், வகுப்பறைகள் ஆசிரியர்களையும் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை தடுத்து, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முன் கணிப்புத் தன்மையை மீட்டெடுக்குமாறு கோருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Washington ,President Trump ,United States ,Trump ,
× RELATED பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு...