×

பகுதி வாரியாக பிரித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்த கோரிக்கை

 

சிவகங்கை, செப். 24: தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இளங்கோ கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெறுவது, குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வைப்பது, 100 விழுக்காடு அனைவரும் தேர்ச்சி பெற வைப்பது உள்ளிட்டவை தொடர்பான கருத்தியல் அடிப்படையான பயிற்சி வகுப்பை வரவேற்கிறோம். இந்தப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கையில் மட்டும் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். சிவகங்கையில் மட்டும் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆசிரியர்கள் சிவகங்கைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பயிற்சி வகுப்புகளை பகுதி வாரியாக பிரித்து சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga ,Education ,Tamil Nadu Tamil Teachers' Association ,Elango ,
× RELATED சங்கரன்கோவிலில் அன்பழகன் பிறந்தநாள் விழா