×

தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

விருதுநகர்: 7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்; அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்; 7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி நடத்தும் பரப்புரையில் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

எடப்பாடி பரப்புரை கூட்டத்தை முடிக்கும்போது அவரும், அவரது ஓட்டுநரும் மட்டுமே இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸை பார்த்தாலே கோவப்படுகிறார். எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள், சோதனைகள், எதிரிகளை நாம் சந்தித்துள்ளோம். நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை. சண்டை போடும் அளவு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை. தமிழகத்தை எட்டி கூட பார்க்க முடியவில்லையே என ஒன்றிய பாஜக அரசு ஏங்குகிறது. திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது. 75 ஆண்டுகள் ஆனாலும் எழுச்சியோடு திமுக இருக்கும்.

Tags : Deputy Principal Assistant Secretary ,Stalin ,Virudhunagar ,Deputy Chief ,Udayaniti Stalin ,Dimuka ,Chathur, Virudhunagar district ,Assembly Constituency ,Deputy Chief Minister Assistant Chief Minister ,Stallin ,
× RELATED ‘‘என்னை ஏன் வம்புக்கு...