×

3 பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் இன்று நிறைவு..!!

சென்னை: 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் இன்று நிறைவுபெறுகிறது. துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, காமராசர் பல்கலை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. கல்வியியல் பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதிதாசன் பல்கலை., விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் இல்லை.

இதையடுத்து, துணைவேந்தர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டு வருகிறது. இந்த நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் பதவிக்காலம் இன்று முடிகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவியின் பதவிக்காலம் இன்று நிறைவுபெறுகிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகத்தின் பதவிக்காலமும் இன்று நிறைவடைந்த நிலையில், பல்கலை கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாத நிலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Anna University ,Chennai University ,Kamaraj University ,Bharathiar University… ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்