- சுதேசி
- அகிலேஷ் யாதவ்
- லக்னோ
- சமாஜ்வாடி கட்சி
- ஜனேஷ்வர் பூங்கா
- லக்னோ, உத்தரப் பிரதேசம்
- பிரிட்டிஷ்
- ஆர்எஸ்எஸ்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜனேஷ்வர் பூங்காவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தேசிய கொடி ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “ ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்ல வேண்டும்.
ஏனெனில், பாரதம் மத அடிப்படையில் பிரிக்கப்படுவதற்காக ஆங்கிலேயர்களால் சில அமைப்புகள் உருவாக்கப்பட்டன என கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபற்றி சில வரலாற்றாசிரியர்களும் எழுதி இருக்கின்றனர். இப்படி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பிளவை உண்டாக்கினார்கள். எனவே, சோசலிசம், மதசார்பின்மை என்ற சித்தாந்தத்தை முதலில் கொண்டிருந்த சங்கி சாதிகள், நாடு முன்னேற தங்கள் முதல் சித்தாந்தத்தை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.
